Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கறுப்பு பண ஒழிப்பின் எதிரொலி: 29 கோடி ரூபா பணமும் 135 கிலோ தங்கமும் பறிமுதல்

In இந்தியா
Updated: 07:11 GMT, Nov 29, 2016 | Published: 07:11 GMT, Nov 29, 2016 |
0 Comments
1609
This post was written by : Anojkiyan

கறுப்பு பண ஒழிப்பு தொடர்பான பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பின் பின், கடந்த 20 நாட்களில் மட்டும் 59 விமான நிலையங்களில் சுமார் 29 கோடி ரூபா பணமும் 135 கிலோ தங்கமும் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 12.5 கோடி ரூபா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், டெல்லி விமான நிலையத்தில் 6.2 கோடி ரூபா பணமும், கொல்கத்தா விமான நிலையத்தில் 5.9 கோடி ரூபா பணமும் சிக்கின.

மேலும், மேற்குறித்த 59 விமான நிலையங்களிலும் 135 கிலோ தங்கம் பிடிபட்டுள்ளது. இதிலும் மும்பை விமான நிலையத்தில்தான் அதிகபட்சமாக 67 கிலோ தங்கம் பிடிபட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் 15 கிலோ தங்கத்தை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கைப்பற்றினார்கள்.

அது போல கணக்கில் வராத 5.5 கிலோ வெள்ளியும் கடந்த 20 நாட்களில் அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg