Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அயர்லாந்து நாடாளுமன்றின் மேற்சபையில் உரையாற்றவுள்ளார் நிக்கோலா ஸ்டர்ஜன்

In
Updated: 07:40 GMT, Nov 29, 2016 | Published: 07:14 GMT, Nov 29, 2016 |
0 Comments
1342
This post was written by : Sylviya
05

அயர்லாந்து நாடாளுமன்றின் மேற்சபையில், ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் (Nicola Sturgeon) விரைவில் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரெக்சிற் விவகாரத்தினால் தற்போது பல தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில், அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லந்துக்கு இடையில் உள்ள உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அயர்லாந்துக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு அங்கமாக, நிக்கோலா நேற்று (திங்கட்கிழமை) அயர்லாந்து ஜனாதிபதி மைக்கல் டி ஹிக்கிங்ஸையும் (Michael D Higgins) வெளியுறவு அமைச்சர் சார்லி ஃபெனகனையும் (Charlie Flanagan) சந்தித்துள்ளார்.

ஸ்கொட்லாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையில் உள்ள உறவுகளை வலுப்படுத்தும் வகையில் வணிக, கலாசார, மற்றும் அரசியல் ரீதியான உறவுகள் வலுப்பெற வேண்டும் என்பது தொடர்பில் நிக்கோலா உரையாடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தனிச் சந்தையில் ஸ்கொட்லாந்து இடம்பிடிப்பது தொடர்பிலும் நிக்கோலா பேச்சவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg