Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிம்பாவேயில் புதிய பணத் தாள்கள் அறிமுகம்!

In
Updated: 07:32 GMT, Nov 29, 2016 | Published: 07:32 GMT, Nov 29, 2016 |
0 Comments
1247
This post was written by : Anojkiyan

பணவீக்கத்தால் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்ற சிம்பாப்வே புதிய தேசிய பணத்தாள்களை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில், சிம்பாப்வே அரசு விரைவில் 1,5,10,50,100,500 டொலர்கள் மதிப்பிலான பணத்தாள்களை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது. இத்தாள்களை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

டொலர்களுக்கு இணையான பணமதிப்பு கொண்ட குறித்த பணத்தாள்கள் சிம்பாவே  மத்திய வங்கியால் விநியோகிக்கப்பட உள்ளன.

உயர் பணவீக்கம் காரணமாக ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் உள்நாட்டு டொலர்களை சிம்பாப்வே கைவிட்ட நிலையில், அமெரிக்க டொலர் மற்றும் பிற சர்வதேச நாணயங்களை சட்டப்பூர்வ நாணயங்களாக சிம்பாவே பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg