Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு

In இந்தியா
Updated: 07:42 GMT, Nov 29, 2016 | Published: 07:41 GMT, Nov 29, 2016 |
0 Comments
1171
This post was written by : Sambavi

வட மாநிலத்தில் தலைவர்களுக்கிடையே உள்ள அரசியல் நாகரிகம் தமிழகத்தில் இல்லை என்பது வேதனையாக உள்ளது என தி.மு.க. பொருளாளரும் எதிர்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக்குழு துணைத் தலைவரும் நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார் எழுதிய புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

புத்தகத்தை தி.மு.க. பொருளாளரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் வெளியிட புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பெற்றுக்கொண்டார்.

பின்னர் பேசிய ஸ்டாலின், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நல்ல நட்பு இருந்ததாக கூறினார்.

மேலும், அந்தக் காலத்தில் தலைவர்களுக்கிடையே இருந்த அரசியல் நாகரீகம் இப்போது இருக்கிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg