Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே நாளில் கோடிஸ்வரனாகி வைப்புப் பணத்தை இழந்த சாரதி: பஞ்சாப்பில் சம்பவம்

In இந்தியா
Updated: 08:03 GMT, Nov 29, 2016 | Published: 08:02 GMT, Nov 29, 2016 |
0 Comments
1160
This post was written by : Sambavi
201611291207030398_taxi-driver-rs-9800-crore-in-the-bank-account_secvpf

பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவை சேர்ந்த வாடகைக் கார் சாரதியின் வங்கி கணக்கில் தவறுதலாக ரூ.9,800 கோடி பதிவு செய்யப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவை சேர்ந்த டாக்சி டிரைவர் பல்வீந்தர்சிங் பிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்ட ஏழைகளுக்கான ஜனதன் வங்கிக் கணக்கினை ஆரம்பித்திருந்தார். குறித்த கணக்கில் இதுவரை 3 ஆயிரம் ரூபாய் சேமித்து வைத்தள்ளார்.

இந்த நிலையில் அவரது வங்கிக் கணக்குப் புத்தகத்தினை வங்கியில் கொடுத்து பதிவு செய்ய கூறினார். அப்போது அவரது கணக்கில் ரூ.9 ஆயிரத்து 805 கோடியே 95 லட்சத்து 12 ஆயிரத்து 231 இருப்பதாக பதிவு செய்து கொடுத்தனர்.

நமது வங்கி கணக்கில் இவ்வளவு பணமா? என ஆச்சரியம் அடைந்த அவர், இதுபற்றி வங்கி அதிகாரியிடம் தெரிவித்தார். அதன் பிறகுதான் தவறு நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணைகளில், அவரது வங்கி கணக்கில் ரூ.200 வரவு வைக்க வேண்டும். இதற்கு பதிலாக வங்கி ஊழியர் தவறுதலாக அவருடைய வங்கி கணக்கு எண்ணை வரவு பணத்துக்கான காலத்தில் பதிவு செய்து விட்டார்.

அதனால்தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. அது பின்னர் சரிசெய்யப்பட்டது. இவ்வளவு பணம் அவரது கணக்கில் கடந்த 4ஆம் திகதி வரவு வைக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், தற்போது இந்தியாவில் பணத் தாள் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், இதற்கும் அந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் உண்டா? என வருமான வரி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வங்கியிடமும் இது சம்பந்தமாக விளக்கம் கேட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg