Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் கமர் பாஜ்வா பதவியேற்பு

In
Updated: 10:16 GMT, Nov 29, 2016 | Published: 08:26 GMT, Nov 29, 2016 |
0 Comments
1242
This post was written by : Anojkiyan
baj

பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் கமர் பாஜ்வா இன்று (செவ்வாய்கிழமை) பதவி ஏற்றுக்கொண்டார்.

ராவல் பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகம் அருகே உள்ள ஹொக்கி மைதானத்தில் இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ரஹீல் ஷெரிப் பணி ஓய்வு பெற்றதையடுத்து புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் கமர் பாஜ்வாவை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அண்மையில் அறிவித்தார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான இரு நாட்டு எல்லையில் பதட்டமான சூழல் நிலவி வருகிற நிலையில், பாகிஸ்தானின் அதிகாரமிக்க பொறுப்பான ராணுவ தளபதி பதவிக்கு புதியவரான கமர் பாஜ்வா நியமிக்கப்பட்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

எல்லைப் பாதுகாப்பு படைப் பிரிவு உள்ளிட்ட முக்கியப் படைப் பிரிவுகளின் தலைமைப் பொறுப்பேற்று சேவை புரிந்துள்ள பாஜ்வா, பயிற்சிப் பிரிவின் தலைமையேற்றுப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், தலைமை தளபதியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg