Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துருக்கி வீரர்களின் உயிரிழப்புக்கு ரஷ்யா காரணம் அல்ல : விளாடிமிர் புடின்

In ஐரோப்பா
Updated: 08:00 GMT, Nov 29, 2016 | Published: 08:00 GMT, Nov 29, 2016 |
0 Comments
1340
This post was written by : Sylviya

சிரியாவில் பணியில் ஈடுபட்டிருந்த துருக்கி படைவீரர்களின் உயிரிழப்புக்கு ரஷ்யா காரணம் அல்ல என, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரியாவில் இருந்த துருக்கி வீரர்கள் அங்கு மேற்கொள்ளப்பட்ட விமான தாக்குதல்களுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டதோடு அவர்களுக்கு இராணுவ மரியாதையுடன் கூடிய இறுதி ஊர்வலமும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், குறித்த விமான தாக்குதலுக்கு ரஷ்யா பொறுப்பில்லை என, ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளதாக துருக்கியின் துணை பிரதமர் நூமான் கர்டலமஸ் (Numan Kurtulmus) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கர்டலமஸ் தெரிவித்துள்ளார்.

இந்த விமானத் தாக்குதல் தொடர்பில் முன்னதாக கருத்து வெளியிட்டிருந்த துருக்கி, அந்த தாக்குதலுக்கு சிரிய அரச துருப்புக்களே காரணமாக இருக்கலாம் என தெரிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, குறித்த சம்பவத்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் எதுவித தொடர்பும் இல்லை என ரஷ்யா தாமாகவே முன்வந்து அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg