Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் குடியேற்றவாசிகளை ஏற்க வேண்டும் : திமித்ரிஸ்

In ஐரோப்பா
Updated: 12:13 GMT, Nov 29, 2016 | Published: 08:26 GMT, Nov 29, 2016 |
0 Comments
1335
This post was written by : Sylviya

கிரேக்கத்திற்கு உதவி புரியும் வகையில், அங்கு வரும் குடியேற்றவாசிகளை ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஏற்க வேண்டும் எனவும், குடியேற்றவாசிகளின் விண்ணப்பங்களை கையாள்வதற்கு மேலதிக அதிகாரிகள் கிரேக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிபெயர்வு தொடர்பான ஆணையர் திமித்ரிஸ் (Dimitris Avramopoulos) நேற்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார்.

கிரேக்கத்தில் சுமார் 60,000 மேற்பட்ட குடியேற்றவாசிகள் இருப்பிடம் கோரி விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களை கையாளும் பொருட்டு அதிகாரிகள் தேவை எனவும் கிரேக்கம் முன்னதாக உதவி கோரியிருந்தது. அதனைத் தொடர்ந்தே திமித்ரி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கருத்தை அவர் ஏதென்ஸில் நடைபெற்ற கருத்துக்களத்தில் உரையாற்றும் போதே தெரிவித்துள்ளார்.

அத்துடன், குடியேற்றவாசிகள் ஐரோப்பாவுக்கு வருவதை கட்டுப்படுத்தும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கிக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை எத்தகை இடர்பாடுகள் ஏற்படினும் தொடர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த உடன்படிக்கையின் படி, அதிகளவான குடியேற்றவாசிகளை துருக்கி ஏற்கும் பட்ச்தில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செல்லும் துருக்கியர்களுக்கு வீசா அற்ற பயண முறைமை ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், கடந்த ஜூலை மாதம் துருக்கியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ சதிப்புரட்சியைத் தொடர்ந்து, பல ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டமையினால் துருக்கியுடனான பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட வேண்டும் என, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் தீர்மானம் மேற்கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg