Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடுத்த அதிரடி உத்தரவு: பா.ஜ.க.வினரை விழிபிதுங்கச் செய்தார் மோடி

In இந்தியா
Updated: 11:01 GMT, Nov 29, 2016 | Published: 08:42 GMT, Nov 29, 2016 |
0 Comments
1180
This post was written by : Sambavi

கடந்த நவம்பர் 8ஆம் திகதி முதல் வங்கி மூலம் செய்யப்பட்ட பணப்பரிவர்த்தனை குறித்த விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளார்.

போலி நாணயத் தாள்களை ஒழிக்கவும், கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும் ரூ.500 மற்றும் ரூ.1000 தாள்கள் வாபஸ் பெறப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறன்றனர்.

அவர்கள், இந்த அறிவிப்பு வெளியாகுவதற்கு முன்னரே, பா.ஜ.க., தலைவர்கள் மற்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக குற்றம்சாட்டி வருகின்றனர். ரூபாய் தாள் வாபஸ் திட்டம் அறிவிக்கும் முன்னர், பீஹாரில் பா.ஜ.க., தலைவர் ஒருவர் பல கோடி ரூபாய்க்கு நிலம் வாங்கியதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இருப்பினும் இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற பா.ஜ.க., சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தினைத் தொடர்ந்து, பா.ஜ.க., சட்ப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது வங்கியில் செய்யப்பட்ட பணப்பரிவர்த்தனை குறித்த விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என மோடி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 8ஆம் திகதி தொடக்கம் செய்யப்பட்ட பணப்பரிவர்த்தனைகளை பா.ஜ.க, தலைவர் அமித் ஷாவிடம் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த கூட்டத்தில், பிரதமர் பேசுகையில், ‘வருமான வரித்துறை சட்ட திருத்த மசோதா, கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு மட்டும் பயன்படுத்தப்பட மாட்டாது. ஏழைகளிடம் திருடப்பட்ட பணத்தை, நலத்திட்ட பணியை செய்வதற்கு பயன்படுத்தப்படும்’ என்று கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg