Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒன்றியத்தின் வர்த்தக சந்தையில் பிரித்தானியாவின் நிலை தொடர்பில் அக்கறை

In
Updated: 10:32 GMT, Nov 29, 2016 | Published: 08:43 GMT, Nov 29, 2016 |
0 Comments
1370
This post was written by : Sylviya

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகியமையின் பின்னர், ஒன்றியச் சந்தையில் பிரித்தானியா அங்கம் வகிப்பது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் அக்கறை செலுத்தி வருகின்றது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வழக்கறிஞர்கள் சிலர், ஐரோப்பிய பொருளாதார வலயத்தில் (European Economic Area) பிரித்தானியாவின் அங்கத்துவம் குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக, தனிச் சந்தையில் இருந்து பிரித்தானியா விலகுகின்றமையை பிரித்தானிய அமைச்சர்கள் நிறுத்த முனையலாம் என தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகும் அதே சமயம், ஐரோப்பிய பொருளாதார வலயத்தில் இருந்தும் பிரித்தானியா உடனடியாக விலகக் கூடாது என்பது தொடர்பிலும் அவர்கள் வாதிடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், குறித்த விடயத்தை பிரித்தானிய அரசாங்கமே தீர்மானிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க, குறித்த விடயம் தொடர்பில் முன்னதாக கருத்து தெரிவித்த பிரித்தானிய அரசாங்கம் ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய விலகும் அதே சமயம் ஐரோப்பிய பொருளாதார வலயத்தில் இருந்தும் பிரித்தானியா விலகும் என தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg