Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னார், முசலி பிரதேச வீதிகளை புனரமைக்க திட்டம்

In இலங்கை
Updated: 09:44 GMT, Nov 29, 2016 | Published: 09:44 GMT, Nov 29, 2016 |
0 Comments
1258
This post was written by : hoshika

நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினூடாக வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு 157.6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு மன்னார் மாவட்டத்தின் வீதிகளை புனரமைக்கும் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.

குறித்த நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) மன்னார் பிரதேச செயலக பகுதிக்குள்ளும், முசலி பிரதேச செயலக பகுதிக்குள்ளும் உத்தியோக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்படி குறித்த திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும் வீதிகளின் விபரம்…

மன்னார் பிரதேச செயலக பிரிவில் 08 வீதிகள்.

 01 – பேசாலை கடற்கரை வீதி – 200 மீட்டர் 03 மில்லியன்.

02 – சின்னக்கரிசல் ஓலைதொடுவாய் வீதி – 350 மீட்டர் 4.5 மில்லியன்.

03 – தாழ்வுபாடு கடற்கரை வீதி – 200 மீட்டர் 03 மில்லியன்.

04 – கோணார்ப்பண்ணை புதுக்குடியிருப்பு வீதி – 500 மீட்டர் 6.5 மில்லியன்.

05 – எருக்கலம்பிட்டி மதராஸா வீதி – 1 கிலோ மீட்டர் 13.3 மில்லியன்.

06 – எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் வீதி – 360 மீட்டர் 5.4 மில்லியன்.

07 – மன்னார் நகர கடைத்தெரு வீதி – 550 மீட்டர் 7.3 மில்லியன்.

08 – மன்னார் சிறிய குருமட வீதி – 680 மீட்டர் 09 மில்லியன்.

 முசலி பிரதேச செயலக பிரிவில் 10 வீதிகள்.

 01 – பண்டாரவெளி, வாரிவெளி வீதி – 1.2 கிலோமீட்டர் 14.4 மில்லியன்.

02 – முள்ளிக்குளம் உள்ளக வீதி – 01 கிலோமீட்டர் 12 மில்லியன்.

03 – கொண்டச்சி உள்ளக வீதி – 500 மீட்டர் 06 மில்லியன்.

04 – வெள்ளி மலை உள்ளக வீதி – 01 கிலோமீட்டர் 12 மில்லியன்.

05 – சிலாவத்துறை நகர பள்ளிவாசல் வீதி – 600 மீட்டர் 7.2 மில்லியன்.

06 – பண்டாரவெளி ஏ எஸ் குளம் உள்ளக வீதி – 200 மீட்டர் 2.4 மில்லியன்.

07 – முசலி குளக்கட்டு உள்ளக வீதி – 1.3 கிலோமீட்டர் 15.6 மில்லியன்.

08 – அகத்திமுறிப்பு உள்ளக வீதி – 01 கிலோமீட்டர் 12 மில்லியன்.

09 – பெரிய புள்ளச்சி பொற்க்கேணி உள்ளக வீதி ( 01 )- 01 கிலோமீட்டர் 12 மில்லியன்.

10 –  பெரிய புள்ளச்சி பொற்க்கேணி உள்ளக வீதி ( 02 )- 01 கிலோமீட்டர்         12 மில்லியன்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் எச்.எம்.ரயீஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முதலிபா பாரூக், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மன்னார் வவுனியா பிரதம பொறியியலாளர் எஸ்.ரகுநாதன், மன்னார் மாவட்ட நிறைவேற்று பொறியியலாளர் துஸ்யந்தன், இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் சாலை முகாமையாளர் சாகிர், தொழில்நுட்ப உதவியாளர்கள், பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

nothern-province-01 nothern-province-02 nothern-province-03 nothern-province-04 nothern-province-05 nothern-province-06 nothern-province-07 nothern-province-08 nothern-province-09 nothern-province-10 nothern-province-11

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg