Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோடியை பாராட்டியதால் ஆபத்தில் மாட்டிக்கொண்டார் பீஹார் முதல்வர்

In இந்தியா
Updated: 10:02 GMT, Nov 29, 2016 | Published: 10:02 GMT, Nov 29, 2016 |
0 Comments
1162
This post was written by : Sambavi

தனது அரசியல் எதிர்காலத்தை அழிக்க சூழ்ச்சி நடப்பதாக பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

ரூ.500 மற்றும் ரூ.1000 பணத்தாள்களை மீளப்பெறல் பற்றிய மத்திய அரசின் நடவடிக்கைக்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இருப்பினும், பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ் குமார் ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்த திட்டத்தை அறிவித்த பிரதமர் மோடியை அவர் பாராட்டி பேசினார்.

அடுத்ததாக பினாமி சொத்துக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். ரூபாய் தாள் வாபசிற்கு எதிராக, பீஹார் அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர். ஆனால், நிதிஷ் குமார் மறுப்பு தெரிவித்தார்.

மேலும், அண்மையில் டெல்லிக்கு சென்ற அவர் பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவை சந்தித்து பேசியதாக திடீர் செய்திகள் வெளியாகின. ஆனால் பாட்னா திரும்பிய நிதிஷ் இதனை திட்டவட்டமாக மறுத்தார்.

இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.,க்களை நிதிஷ் குமார் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘நான், பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவை நேரில் சந்தித்ததாகவும், பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசியதாகவும் சிலர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.

அவர்கள் எனது அரசியல் எதிர்காலத்தை அழிக்க சூழ்ச்சி செய்து வருகின்றனர். பிரதமர் மோடியை பாராட்டி பேசியது சாதாரணமானது தான். இதில் அரசியல் சமிஞ்கைகள் எதுவும் இல்லை. அரசியல் ரீதியாக பார்க்கக்கூடாது’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg