Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரைக்காற்சட்டையுடன் சட்டசபைக்கு சென்ற பா.ஜ.க. உறுப்பினர்

In இந்தியா
Updated: 10:08 GMT, Nov 29, 2016 | Published: 10:07 GMT, Nov 29, 2016 |
0 Comments
1209
This post was written by : Sambavi

பீஹார் மாநிலத்தில் பேட்டியாவிலிருந்து மனுவாப்புல் வரை 44 கிலோமீற்றர் சாலை அமைக்கும் திட்டத்தை முதல்வர் நிதீஷ்குமார் 2013ஆம் ஆண்டு அறிவித்தார்.

இதனை இன்னும் நிறைவேற்றாததால் கண்டிக்கும் விதமாக, மேற்கு சம்பாரண் பகுதியின் பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினரான பினய் பிஹாரி சட்டசபைக்கு அரைக்காற்சட்டை மற்றும் பனியனுடன் சென்றுள்ளார்.

இந்த நிலையில், சட்டசபைக்கு அவமரியாதை ஏற்படுத்தியதாக பினய் பிஹாரிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வளாகத்திலேயே போராட்டம் நடத்திய பினய் பிஹாரி திட்டம் நிறைவேற்றும் வரை இப்படித்தான் சட்டசபைக்கு வருவேன் என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பினய் பிஹாரியின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அவைத் தலைவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg