Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பஹ்ரேனுக்கான விஜயத்தை பிரதமர் மே தவிர்க்க வேண்டும் : இஸ்லாமிய IHRC அமைப்பு

In
Updated: 10:39 GMT, Nov 29, 2016 | Published: 10:33 GMT, Nov 29, 2016 |
0 Comments
1275
This post was written by : Sylviya

பாரசீக ஒத்துழைப்பு வளைகுடா கவுன்சிலின் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு பிரதமர் தேரேசா மே பஹ்ரேனுக்கு விஜயம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என, பிரித்தானியாவில் உள்ள அரசு சாரா அமைப்பான IHRC  தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த இஸ்லாமிய அமைப்பு நேற்று (திங்கட்கிழமை) பிரதமர் மேயிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில், பஹ்ரேன் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும், பல ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பஹ்ரேனில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக குறித்த அமைப்பு அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் மாத ஆரம்பப் பகுதியில், பிரதமர் மே பஹ்ரேனின் தலைநகர் மனாமாவுக்கு (Manama) செல்லவுள்ளதாகவும், அங்கு அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே   IHRC  அமைப்பு குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg