Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்றது இந்தியா

In கிாிக்கட்
Updated: 10:41 GMT, Nov 29, 2016 | Published: 10:39 GMT, Nov 29, 2016 |
0 Comments
1273
This post was written by : Elakkiya
India England Cricket

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்களால் வெற்றிபெற்ற இந்திய அணி ஐந்து போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 2:0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 26ஆம் திகதி மொஹாலியில் ஆரம்பமானது.

இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்று தமது முதல் இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 283 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் பிறிஸ்ரோவ் 89 ஓட்டங்களையும், பட்லர் 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் மொஹமட் சமி 3 விக்கட்டுக்களையும், ரவீந்தர ஜடேஜா, உமேஸ் யாதவ், ஜெயன்ட் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களையும் வீழ்த்தினார்.

தொடர்ந்து முதல் இனிங்சை தொடர்ந்த இந்திய அணி சிறப்பாக துடுப்பெடுத்தாடி 417 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில், ஜடேஜா 90 ஓட்டங்களையும், அஸ்வின் 72 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி 62 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில், இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கட்டுக்களையும், ராஷிட் 4 விக்கட்டுக்களையும், வீழ்த்தினர்.

தொடர்ந்து 134 ஓட்டங்கள் பின்னடைவுடன் தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணியினர், 236 ஒட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து அட்டமிழக்க ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஜோ ரூட் 78 ஓட்டங்களையும், பின்வரிசை வீரர்களான ஹமீத் 58 ஒட்டங்களையும், வோக்ஸ் 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் அஸ்வின் மூன்று விக்கட்டுக்களையும், ஜடேஜா, ஜெயன்ட் யாதவ், சமி ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

தொடர்ந்து 103 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இனிங்சைத் தொடர்ந்த இந்திய அணி 2 விக்கட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் பார்த்திப் பட்டேல் ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களையும், புஜரா 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். போட்டியின் நாயகனாக ஜடேஜா தெரிவு செய்யப்பட்டார்.

இங்கிலாந்து அணி வீரர்களின் பொறுப்பற்ற துடுப்பாட்டத்தினால் இந்த போட்டி நான்கு நாட்களில் முடிவடைந்துள்ளதாக இரசிகர்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg