Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போலந்து – பிரித்தானியாவுக்கு இடையில் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை

In ஐரோப்பா
Updated: 10:58 GMT, Nov 29, 2016 | Published: 10:58 GMT, Nov 29, 2016 |
0 Comments
1276
This post was written by : Sylviya

போலந்து பிரதமர் பீட்டாவுடன் (Beata Szydlo), பிரித்தானிய பிரதமர் தேரேசா மே பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தைகள், போலந்து மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் வகையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலக வேண்டும் என கடந்த ஜூன் மாதம் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, பிரித்தானியாவில் உள்ள போலந்து நாட்டவர்கள் மீது அதிகளவான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவுகளை வலுவடையச் செய்யும் பொருட்டும் பிரெக்சிற் விவகாரத்தின் பின்னர் போலந்துடனான உறவுகள் சிறப்பாக திகழ வேண்டும் எனும் காரணத்தினாலும் குறித்த இரு தலைவர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

குறித்த பேச்சுவார்த்தையின் பொருட்டு பிரித்தானியா சென்ற பேலந்து பிரதமர் பீட்டா, பிரித்தானியாவில் உள்ள போலந்து போர் நினைவுத் தூபியில் மலர்வளையங்களை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

2004 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த போலந்து, இதுவரை காலமும் பிரித்தானியாவின் நெருங்கிய நட்பு நாடாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg