Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டிரம்ப் கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை: வெள்ளை மாளிகை

In
Updated: 11:23 GMT, Nov 29, 2016 | Published: 11:23 GMT, Nov 29, 2016 |
0 Comments
1408
This post was written by : Anojkiyan

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு நடந்ததாக டொனால்ட் டிரம்ப் கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த குற்றச்சாட்டை நிருபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்றும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டனுக்கு ஆதரவாக லட்சக்கணக்கான மக்கள் முறைகேடான வழியில் வாக்களித்துள்ளதாகவும், முறைகேடு நடைபெறாமல் போயிருந்தால், தான் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்திருப்பேன் என்று டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

மேலும், அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில், கிளிண்டன் வெற்றி பெற்ற மாகாணங்களான விர்ஜீனியா, கலிபோர்னியா உள்ளிட்டவற்றில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாகவும், இது குறித்து ஊடகங்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை என்றும் டிரம்ப் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில், வெள்ளை மாளிகை குறித்த கருத்தினை வெளியிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg