Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யானைகளிடமிருந்து காப்பாற்றுங்கள்: மீள்குடியேற்ற கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Updated: 16:25 GMT, Nov 29, 2016 | Published: 10:59 GMT, Nov 29, 2016 |
0 Comments
1292
This post was written by : Varshini

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீள்குடியேற்ற கிராமங்களான தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடிச்சாறு, சாகாமம் ஆகிய கிராமங்களுக்கான யானை வேலிகளை விரைவுபடுத்தி தங்களின் உயிர்களையும், விவசாய பயிர்களையும் பாதுகாத்துத் தருமாறு நல்லாட்சி அரசினை வலியுறுத்தி, இக்கிராம மக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தலைமையில் குறித்த கிராம மக்கள் திருக்கோவிலில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஒன்றுதிரண்டு, அங்கிருந்து பேரணியாக திருக்கோவில் பிரதேச செயலகம் வரை சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, ”மீள் குடியேற்றம் என்ற பெயரில் பாதுகாப்பற்ற எமது கிராமத்தில் குடியமர்த்தி எம்மை யானைகளுக்கு பலியாக்காதீர்கள்”, ”நல்லாட்சியே அரசே எம்மை திரும்பி பார்”, ”எமது வாழ்வாதாரத்தையும், உயிரின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தவும்” உள்ளிட்ட சுலோகங்கள் பதித்த பதாதைகளை ஏந்தியவாறு கோஷமிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜனிடம் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

வெறுமனே அறிக்கைகளால் மாத்திரம் மக்களுக்காக மீள் குடியேற்றம் மற்றும் அபிவிருத்திகள் இடம்பெறுவதாக தெரிவிப்பதை விடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படாமல் பாதுகாப்புடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான நடவடிக்கைளை பெற்றுக் கொடுக்க வேண்டுமென இதன்போது சந்திரநேரு சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.

இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும், யானை வேலிகளை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படுமெனவும் திருக்கோவில் பிரதேச செயலாளர் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.

resettlement-village-protest-2

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg