Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு பிரான்ஸில் உள்ள 20 வாத்துக்கள் H5N8 வைரஸ் தொற்றால் உயிரிழப்பு

In ஐரோப்பா
Updated: 17:21 GMT, Nov 29, 2016 | Published: 12:01 GMT, Nov 29, 2016 |
0 Comments
1230
This post was written by : Sylviya

வடக்கு பிரான்ஸில் உள்ள பறவைகளுக்கு  அண்மைக் காலம் தொடக்கம் H5N8 எனும் வைரஸ் தொற்று பரவி வந்ததைத் தொடர்ந்து, சுமார் 20 வாத்துகளுக்கும் குறித்த வைரஸ் தொற்றியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரான்ஸ் விவசாய அமைச்சின் அதிகாரி, “வாத்து பண்ணையில் இருந்த சில வாத்துகள் உயிரிழந்து கிடந்ததை நாம் அவதானித்தோம். குறித்த வாத்துக்களை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தியமையின் பின்னர், அவை H5N8 தொற்றின் காரணமாகவே உயிரிழந்துள்ளன என்பது  தெரியவந்தது” என தெரிவித்தார்.

குறித்த சம்பவத்தை தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பிரதேசத்தில் மேற்பார்வை பணிகளை தீவிரப்படுத்தியதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

குறித்த வைரஸ் ஐரோப்பாவில் உள்ள பறவையினங்களுக்கு தொற்றி வந்த நிலையில், நெதர்லாந்தில் மாத்திரம்  சுமார் 190,000 வாத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், குறித்த வைரஸ் தொற்று மனிதர்களுக்கு இதுவரை பரவவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg