Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை செய்ய விஷேட நீதிமன்றம் எங்கே? கேள்வி எழுப்பினார் ஹேரத்

In இலங்கை
Updated: 16:38 GMT, Nov 29, 2016 | Published: 16:38 GMT, Nov 29, 2016 |
0 Comments
1258
This post was written by : hoshika

வித்தியா உள்ளிட்ட பல சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விஷேட நீதிமன்றம் ஒன்றை நிறுவுமாறு நாம் வலியுறுத்தினோம் இன்றுவரை அது சாத்தியப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

2017 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மகளீர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கான நிதியொதுக்கீடு தொடர்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் விஷேட நீதிமன்றை நீதியமைச்சின் ஊடாகவே கொண்டுவரமுடியும். அதற்கான கட்டிடத்தையும் நீதிமன்றக் கட்டிடத் தொகுதியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். எனவே, இது குறித்து இனிமேலாவது அரசு சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

சிறுவர் விவகாரம் தொடர்பில் வெறும் 5 மில்லியனை மட்டும் ஒதுக்கிவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு 79 கோடி ரூபாவை அரசு ஒதுக்கியுள்ளது. இது எந்தவகையில் நியாயமாகும்? இந்த அரைக் கோடியை வைத்துக் கொண்டு எந்த செயற்பாட்டை மேற்கொள்ள முடியும்? எனவும் கேள்வி எழுப்பினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg