Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாவீரர் தின நிகழ்வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் உரிமை ராணுவத்திற்கு இல்லை

In இலங்கை
Updated: 09:25 GMT, Nov 30, 2016 | Published: 02:53 GMT, Nov 30, 2016 |
0 Comments
2836
This post was written by : Varshini

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ராணுவத்திற்கு இல்லையென பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, மாவீரர் தின நிகழ்வுகள் வீதியிலும் பொது இடத்திலும் நடத்தப்பட்டதே தவிர ராணுவ முகாமுக்குள் நடத்தப்படவில்லையென குறிப்பிட்ட பாதுகாப்புச் செயலர், இதனுடன் இராணுவத்தை தொடர்புபடுத்த முடியாதெனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந் நடவடிக்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சட்டம் ஒழுங்கு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களத்திற்கு மாத்திரமே உண்டு எனவும் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg