Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடையாள வேலைநிறுத்தத்தில் குதித்தனர் அரச வைத்திய அதிகாரிகள்

In இலங்கை
Updated: 03:13 GMT, Nov 30, 2016 | Published: 03:13 GMT, Nov 30, 2016 |
0 Comments
1240
This post was written by : Varshini

வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (புதன்கிழமை) நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புற்றுநோய் வைத்தியசாலை, சிறுநீரக பிரிவு, காசல் வைத்தியசாலை, சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை, டி சொய்சா பெண்கள் வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய வைத்தியசாலைகளில் இவ் வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளான ஓய்வூதிய ரத்து, அரச வைத்தியசாலைகளை தனியாருக்கு வழங்கல் உள்ளிட்டவற்றிற்கு எதிராக இந்த அடையாள வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வைத்திய அதிகாரிகளின் இந்த வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லையென தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, வேலைநிறுத்த போராட்டத்தை எதிர்கொள்ள தயாரென கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg