Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துருக்கியில் தீ விபத்து: பாடசாலை மாணவிகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு

In ஐரோப்பா
Updated: 04:28 GMT, Nov 30, 2016 | Published: 04:28 GMT, Nov 30, 2016 |
0 Comments
1240
This post was written by : Elakkiya

துருக்கியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.

தெற்கு துருக்கியின்  அதனா பகுதியில் நடுத்தரப் பாடசாலை ஒன்றின் பெண்கள் தங்குமிட கட்டடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக நகர ஆளுநர் மஹ்மூத் டிமித்ரஸ் தெரிவித்துள்ளார்.

மின்சார கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் சந்தேகிக்கப்படுகின்றது எனினும் தெளிவான காரணங்கள் வெளியாகவில்லை.

தீ மளமளவென பரவியதால் வீட்டின் கதவினை திறந்து கொண்டு வெளியே வர முடியாததால் பலர் உள்ளே சிக்கி உயிரிழந்ததாகவும் சிலர் ஜன்னல் வழியாக கீழே குதித்து காயங்களுடன் உயிர்தப்பினர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் 12 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த மாணவிகள் 11 முதல் 14 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகின்றது.

மேலதிக விபரங்கள் எவையும் வெளியாகவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg