Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊழலையும், தவறான ஆட்சிமுறையையும் மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள்: மோடி

In இந்தியா
Updated: 04:38 GMT, Nov 30, 2016 | Published: 04:38 GMT, Nov 30, 2016 |
0 Comments
1267
This post was written by : Varothayan

இந்தியா முழுவதும் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை, நாடாளுமன்ற இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றின் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமைந்துள்ளதன் மூலம், ஊழலையும், தவறான ஆட்சிமுறையையும் மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்பது தெளிவாகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்துத் தெரிவிக்கையில், வடகிழக்கிலும், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் அண்மையில் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல்களில் பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களில் வெற்றி வாகை சூடியது. இதன் மூலம், தேசத்தின் வளர்ச்சியை மட்டுமே அவர்கள் விரும்புகிறார்கள் என்பதும் தெளிவாகிறது- என்றார்.

அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெற்றது. இதேபோல், மத்தியப் பிரதேசம், குஜராத், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் பெரும்பான்மையான இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது. மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் பா.ஜ.க அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg