Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மின்சக்தி உற்பத்தி வலயமாகிறது சம்பூர் காணி

In இலங்கை
Updated: 04:34 GMT, Nov 30, 2016 | Published: 04:34 GMT, Nov 30, 2016 |
0 Comments
1298
This post was written by : Varshini

திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் காணப்படும் மின்சார சபைக்குச் சொந்தமான 500 ஏக்கர் காணியை, மின்சக்தி உற்பத்திக்கான வலயமாக மாற்றுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் தொடர்;ந்து தெரிவிக்கையில்-

”இலங்கையில் 41 ஆயிரத்து 174 வீடுகளுக்கு மின்சாரம் இல்லை. இன்னும் ஐந்து மாதங்களுக்குள் சகல வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவதே அரசின் நோக்கமாக இருக்கின்றது.

நல்லாட்சி அரசு உதயமாகிய பின்னர் சகல வீடுகளுக்கும் மின்சாரம் என்ற திட்டத்தின்கீழ் 2 இலட்சத்து 24 ஆயிரத்து வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கையில் மின்சாரமற்ற வீட்டுக் கூறுகளின் சதவீதம் 0.8 ஆகும். ஏனைய வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கு ஐந்து மாதங்கள் வரை செல்லும்.

மின்சாரத்துக்காக அதிகரிக்கும் கேள்வியை சமாளிக்கும் திட்டமும் இருக்கிறது. கெரவலபிட்டியவில் திரவ இயற்கை வாயு மின்நிலையம் அமைப்பதற்கு விலைமனு கோரப்பட்டுள்ளது. நுரைச்சோலை மின் நிலையத்திற்கு அடுத்த மின்நிலையமாக இது விளங்கும். அம்பாந்தோட்டையிலும் இவ்வாறானதொரு மின் நிலையம் அமைக்கப்படும்.

அத்துடன், சூரியசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி ஆகிய வழிகளிலும் மின் உற்பத்தி செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg