Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடைநிலை வீரர்களின் பங்களிப்பால்தான் சாதனைக்குரிய வெற்றியை எட்ட முடிந்தது: கோஹ்லி

In கிாிக்கட்
Updated: 04:48 GMT, Nov 30, 2016 | Published: 04:48 GMT, Nov 30, 2016 |
0 Comments
1374
This post was written by : Anojkiyan

இங்கிலாந்து அணிக்கெதிரான 3வது டெஸ்ட் போட்டியின் வெற்றியை கடைநிலை வீரர்களின் பங்களிப்பால்தான எட்ட முடிந்ததாக இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

மொஹாலியில் நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்று முடிந்த 3வது டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இவ் வெற்றியின் பின் கோஹ்லி நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

”ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக அளவு ஒத்துழைக்கவில்லை. நாங்கள் சிறந்த கிரிக்கெட் திறமையை வெளிப்படுத்தினோம். நாங்கள் மேலும் மேலும் நம்பிக்கையை பெற்று வருகிறோம்.

கடைநிலை வீரர்களின் பங்களிப்பு பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருந்தது. இங்கிலாந்து நாணய சுழற்சி வென்றதும் ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பியது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. இதனால் நாங்கள் உத்வேகம் அடைந்தோம். கடைநிலை வீரர்களின் பங்களிப்பால்தான் இந்த சாதனைக்குரிய வெற்றியை எட்ட முடிந்தது. அவர்களால் இங்கிலாந்து அணியை பின்னுக்குத் தள்ளினோம். என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg