Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மூவரின் உயிரை காவுகொண்ட டென்னிஸி காட்டுத்தீ

In
Published: 05:03 GMT, Nov 30, 2016 |
0 Comments
1247
This post was written by : Risha

அமெரிக்காவின் டென்னிஸி மாநிலத்தின் செவியர் கவுண்டி பகுதியில் வரலாறு காணாத அளவில் பரவிவரும் காட்டுத்தீயின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் மூவர் உயிரிழந்திருப்பதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சுமார் 14 பேர்வரை காயமடைந்தும் உள்ளனர். அத்துடன், சுமார் 100 வீடுகள் வரை தீயினால் முற்றாகவோ பகுதியளவிலோ சேதமாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சுமார் 14 ஆயிரம் பேர்வரை குறித்த பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், மூவர் கடும் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டென்னிஸி அவசர உதவி பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

காட்டுத்தீயின் தாக்கத்தினால் இதுவரை மூவர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என செவியர் கவுண்டி மேயர் லெரி வோட்டர்ஸ் குறிப்பிட்டார். இந்த செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாக குறிப்பிட்ட அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

அதேவேளை, சுமார் 100 ஆண்டுகளின் பின்னர் டென்னிஸி மாநிலத்தில் பரவிவரும் காட்டுத்தீயின் பாதிப்பினால் போராடிவரும் மக்களுக்காக பிரார்த்திப்பதாக துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் குறிப்பிட்டார்.

காட்டுத் தீயின் எதிரொலியாக சுமார் 12 ஆயிரம் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன இருளில் மூழ்கியுள்ளன. அதேவேளை, 2 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg