Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்க பல்கலைக்கழக தாக்குதல்: ஐ.எஸ். பொறுப்பேற்பு

In
Updated: 06:14 GMT, Nov 30, 2016 | Published: 05:23 GMT, Nov 30, 2016 |
0 Comments
1507
This post was written by : Risha

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் சோமாலிய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரால் நடத்தப்பட்ட அத்தாக்குதலில் 11 பேர் காயமடைந்தனர்.

பாதசாரிகள் நிறைந்திருந்த பகுதியில், வேகமாக வாகனத்தை செலுத்திய குறித்த நபர் பின்னர் கண்மூடித்தனமாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். அதனை தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே குறித்த நபரை சுட்டுக்கொன்றனர்.

இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற அமைப்பினர், மேற்படி தாக்குதலை மேற்கொண்டவர் தமது அமைப்பை சேர்ந்த 18 வயதுடைய வணிக இளங்கலை பட்டதாரி என அறிவித்துள்ளது.

இச்சம்பவத்திற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்ற போதிலும், அது இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.

மேற்படி தாக்குதலில் காயமடைந்த 11 பேரில் நால்வர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg