Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பா.ஜ.க.வை எதிர்ப்பவர்களை மக்களும் எதிர்க்கின்றனர்: அமித் ஷா

In இந்தியா
Updated: 05:15 GMT, Nov 30, 2016 | Published: 05:15 GMT, Nov 30, 2016 |
0 Comments
1140
This post was written by : Varothayan

மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கிறார்கள்; பதிலுக்கு மக்கள் தேர்தல்களில் பா.ஜ.க.வை ஜெயிக்க வைக்கிறார்கள் என்று பா.ஜ.க தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநில இடைத் தேர்தல்களிலும், மகாராஷ்டிரம், குஜராத் உள்ளாட்சித் தேர்தல்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்றது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், மகராஜ்கஞ்ச் நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அமித் ஷா மேலும் தெரிவிக்கையில், ரூபாய் தாள்கள் செல்லாததாக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய முழு அழைப்புக்கும், மக்கள் சீற்றப்பேரணிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றன. ஆனால், தேர்தல்களில் பா.ஜ.க இதுவரை இல்லாத அளவு வெற்றிகளைக் குவித்து வருகிறது.

ரூபாய் தாள்கள் விவகாரத்தில் பொதுமக்கள் பா.ஜ.க.வின் பக்கம் இருப்பதை இது உணர்த்துகிறது. ஏழை மக்கள் யாரிடமும் கறுப்புப் பணம் இல்லை. ராகுல், அகிலேஷ், மாயாவதி போன்றவர்களிடம் தான் கறுப்புப் பணம் உள்ளது.

தற்போது அவை செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் அந்தப் பணத்தை அவர்கள் பறிகொடுத்து விட்டார்கள். அதனால் தான் அவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். அதனால் சமாஜவாதி கட்சியினர், பகுஜன் சமாஜ் கட்சியினர், காங்கிரஸார், மம்தா, அரவிந்த் கேஜரிவால் ஆகியோர் பிரதமரின் மீது கடுங்கோபத்தில் உள்ளனர்- என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg