Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உடனடியாக கரை திரும்புமாறு, மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ஆய்வு மையம்

In இந்தியா
Updated: 17:19 GMT, Nov 30, 2016 | Published: 05:22 GMT, Nov 30, 2016 |
0 Comments
1623
This post was written by : Varothayan

தமிழகத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடல் பகுதியில் வேகமான காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலாக மாறும் சூழல் உள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது தென்மேற்கு திசையை நோக்கி நகரும்போது தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் குறிப்பிடுகையில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது வடதமிழகம், புதுவையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக நாளை முதல் தமிழகம், புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகம், புதுவை கடற்பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இன்று மாலை முதல் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்ப எச்சரிக்கப்படுகிறார்கள்- என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg