Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பு தேரரின் முறைப்பாட்டிற்கு பதிலளிக்க பொலிஸ் நிலையம் சென்றார் வியாழேந்திரன்

In இலங்கை
Updated: 05:52 GMT, Nov 30, 2016 | Published: 05:24 GMT, Nov 30, 2016 |
0 Comments
1189
This post was written by : Varshini

தம்மை அச்சுறுத்தியதாக மட்டக்களப்பு மங்ளராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் செய்த முறைப்பாடு தொடர்பில் பதிலளிப்பதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தார்.

கரடியனாறு பொலிஸாரால் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏறாவூர்ப்பற்று செங்கலடி – பதுளை வீதியிலுள்ள பன்குடாவெளியில் அரச மரம் காணப்படும் காணியொன்றிற்குள் கடந்த 16ஆம் திகதி அத்துமீறி நுழைந்து, குறித்த தேரர் விஹாரை கட்ட முனைந்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் சென்றிருந்ததோடு, பொலிஸாரும் வரவழைக்கப்பட்டிருந்தனர். குறித்த சந்தர்ப்பத்தில் வியாழேந்திரன் தம்மை அச்சுறுத்தியதாக தெரிவித்தே சுமணரத்ன தேரர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

police-inquiry-for-viyalendran-2

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg