Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீடித்த யுத்தநிறுத்தத்தை உக்ரேனில் உருவாக்குவதில் பின்னடைவு: பிரான்ஸ்

In ஐரோப்பா
Updated: 09:48 GMT, Nov 30, 2016 | Published: 05:23 GMT, Nov 30, 2016 |
0 Comments
1202
This post was written by : Elakkiya

கிழக்கு உக்ரேனில் நீடித்த யுத்தநிறுத்தத்தை உருவாக்குவதில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் மார்க் அய்ரால்ட் தெரிவித்துள்ளார்.

எனினும் பேச்சுவார்த்தைகளில் முறிவு ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுட்டுள்ளார்.

உக்ரேனின் கிழக்கு பிராந்தியத்தில் நீடித்த சமாதானத்தை பெறும் நோக்கில் பிரான்ஸ், ஜேர்மன், ரஷ்யா மற்றும் உக்ரேன் ஆகிய நாடுகளுக்கு இடையில் இடம்பெற்ற நான்கு வழிபேச்சுவார்த்தையை தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஃபிராங்-வோல்டர் ஸ்ரெய்ன்மையருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து கருத்து தெரிவித்த அய்ரால்ட், ‘ கிழக்கு உக்ரேனில் நீடித்த சமாதானத்தை பெறுவதற்கு பெருமளவு வேலை உள்ளது. ஆனால் இந்த முறை சிறந்த ஒன்றாகும். இது கஷ்டமான ஒன்றுதான். எனினும் பேச்சுவார்த்தைகள் முறிவடையவில்லை.’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மின்ஸ்க் உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ள அய்ரால்ட், ஐரோப்பிய கண்டத்தின் அவலநிலையிலிருந்து மீள்வதற்கு சாத்தியமான ஒரே வழி உரையாடலே என்றும் தெரிவித்தார்.

பிரான்ஸில் எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் முன்னணி வேட்பாளரான பிரான்சுவா ஃபிலோன், ரஷ்யா மீதான தடைகளை தளர்த்துவதையே விரும்புகின்றார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த அய்ரால்ட், உக்ரைன் நெருக்கடிகளில் மேற்கத்தேய பிளவுகளை விரிவுபடுத்துவதற்கு ரஷ்யா காத்திருப்பதாகவும் ரஷ்யா மீதான தடைகளை தளர்த்துவதானது முரண்பாடுகளை தீர்பதற்கான குறிக்கோள்களை வலுவிழக்கச் செய்யும் என்பதுடன் நாட்டின் பாதுகாப்புக்கு ஆச்சுறுத்தல் என்றும் தெரிவித்தார்.

மேலும், ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடைகளில் உறுதியாக நிற்பதற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அய்ரால்ட் அழைப்பு விடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg