Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவில் 15 அமெரிக்க டொலருக்கான போராட்டம்: 100 பேர் கைது

In
Updated: 05:58 GMT, Nov 30, 2016 | Published: 05:58 GMT, Nov 30, 2016 |
0 Comments
1252
This post was written by : Risha

குறைந்தபட்ட ஊதியத்தொகை மற்றும் தொழிற்சங்க உரிமைகள் என்பவற்றை அதிகரிக்குமாறு வலியுறுத்தி அமெரிக்காவின் முக்கிய நகர்களிலும், விமான நிலையங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு, ஒரு மணிநேரத்திற்கான குறைந்தபட்ட ஊதியத்தை 15 அமெரிக்க டொலர்கள் அதிகரிக்க வலியுறுத்தி அமெரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச அமைப்பின் வழிநடத்தலின் கீழ் நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டமானது அமெரிக்காவின் முக்கிய வர்த்தக மையங்களான நிவ்யோர்க், சிக்காகோ மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் உட்பட் சுமார் 100 நகர்களில் முன்னெடுக்கப்பட்டது.

நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் விமான போக்குவரத்து, உணவகங்கள், சுகாதார துறை மற்றும் கல்வித்துறை ஆகியவற்றில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானோர் கலந்துப் கொண்டிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg