Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குறைவான நேரத்தில் பந்து வீசியதால் அசார் அலிக்கு 100 சதவீதம் அபராதம்

In கிாிக்கட்
Updated: 05:51 GMT, Nov 30, 2016 | Published: 05:42 GMT, Nov 30, 2016 |
0 Comments
1390
This post was written by : Anojkiyan

நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் கொடுக்கப்பட்ட நேரத்திற்கும் குறைவான நேரத்தில் பந்து வீசியதால் பாகிஸ்தான் அணியின் தலைவர் அசார் அலிக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஹெமில்டனில் நடைபெற்ற இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் 2வது இன்னிங்சில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசாததால் அசார் அலியின் இந்த போட்டியின் சம்பள பணம் அனைத்தையும் அபராதமாக ஐ.சி.சி. விதித்தது. அத்துடன் மற்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

இதே பிரச்சினையில் முதல் டெஸ்டில் சிக்கியதால் மிஸ்பா உல் ஹக் ஒரு போட்டியில் தடை பெற்று இந்த டெஸ்டில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 138 ஒட்டகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இரு போட்டிகள் கொண்ட தொடரை பறிகொடுத்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg