Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரூபாய் தாள்கள் விவகாரத்தில் அத்வானி தலைமையில் ஆலோசனைக் குழு!

In இந்தியா
Updated: 06:13 GMT, Nov 30, 2016 | Published: 05:45 GMT, Nov 30, 2016 |
0 Comments
1168
This post was written by : Varothayan

ரூபாய் தாள்கள் விவகாரத்தில், மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைக் குறைப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சத்ருகன் சின்ஹா கேட்டுக் கொண்டுள்ளார்.

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கச் சென்றிருந்த அவர், நேற்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், இன்னும் சில தினங்களில், அடுத்த மாதத்துக்கான சம்பளத் திகதி வந்துவிடும்.

எனவே மாத ஊதியம் பெறுவோர் சிரமமின்றி பணம் பெறுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். இதற்கான ஆலோசனை வழங்குவதற்காக, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பு, கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமர் மோடி சரியான நேரத்தில் எடுத்த துணிச்சலான நடவடிக்கை. ரூபாய் தாள்கள் செல்லாது என்று பிரதமர் அறிவித்தவுடன் அவரை முதலில் பாராட்டியது நான் தான். ஆனால், அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதில் சில குழப்பங்கள் ஏற்பட்டுவிட்டன- என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg