Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தற்போதைய அணி பொதுவாகவே முற்றிலும் மாறுபட்டது: குக் கருத்து

In கிாிக்கட்
Updated: 06:13 GMT, Nov 30, 2016 | Published: 06:13 GMT, Nov 30, 2016 |
0 Comments
1303
This post was written by : Anojkiyan

தற்போது இந்தியாவில் விளையாடும் இங்கிலாந்து அணி பொதுவாகவே முற்றிலும் மாறுபட்டது என இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் அலைஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.

மொஹாலியில் நடைபெற்ற 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் மூலம் தொடரில் 0-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது. எஞ்சிய இரண்டு டெஸ்டிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றால்தான் தொடரை சமன்செய்ய முடியும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

2012ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்த இங்கிலாந்து அணி தொடரை 2-1 எனக்கைப்பற்றியது. இந்நிலையில், தற்போது விளையாடும் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது குறித்து குக் கூறுகையில்,

2012ஆம் ஆண்டு அணியில் அனுபவம் வாய்ந்த பழைய வீரர்கள் இருந்தார்கள். 2012ஆம் ஆண்டு இந்தியா வந்து விளையாடி எங்கள் அணி முற்றிலும் மாறுபட்டது. அப்போதைய அதிக வயதுடைய அணியுடன் தற்போது ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. அது முற்றிலும் மாறுபட்ட அமைப்பை கொண்ட அணி.

அணியில் இளம் வீரர்கள் இருந்தாலும், நான்கு வருடத்திற்கு மேல் இதுபோன்ற சூழ்நிலையில் விளையாடிய வீரர்கள் இருந்தனர். எங்களுடைய 2012ஆம் ஆண்டு அணியில் ஏராளமான அனுபவ வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் இதுபோன்ற சூழ்நிலையிலான ஆடுகளத்தில் ஏராளமான போட்டியில் விளையாடி இருந்தார்கள்.

தற்போதைய அணியில் உள்ள முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் ஒன்றிரண்டு போட்டிகளில்தான் இதற்கு முன் விளையாடி உள்ளனர். ஆகவே, இந்த அணி பொதுவாகவே முற்றிலும் மாறுபட்டது. என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg