Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோடியால் தன்னுடைய சொத்து விபரத்தை வெளியிட முடியுமா?- மம்தா சவால்

In இந்தியா
Updated: 16:14 GMT, Nov 30, 2016 | Published: 05:51 GMT, Nov 30, 2016 |
0 Comments
1210
This post was written by : Varothayan

பா.ஜ.க தலைவர்களிடம் வங்கிக் கணக்கு தகவல்களைக் கோருவதற்கு முன் தனது வங்கிக் கணக்கு விவரங்களை வெளியிட பிரதமர் நரேந்திர மோடி தயாரா? என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.

அதிக மதிப்புடைய ரூபாய் தாள்களை திருப்பப் பெறும் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவில் சமாஜவாதி கட்சியுடன் இணைந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி நேற்று (செவ்வாய்க்கிழமை) பேரணி ஒன்றை நடத்தியது.

இந்தப் பேரணியில் பங்கேற்று உரையாற்றும் போதே மம்தா மோடிக்கு சவால் விடுத்தார். அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில், பிரதமர் மோடி தற்போது முகமது பின் துக்ளக் மன்னர் மற்றும் ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரி ஹிட்லர் ஆகியோரையும் விஞ்சி விட்டார். அவர் ரூபாய் தாள்கள் வாபஸ் நடவடிக்கை மூலம் சாமானிய மக்களின் அரசியல் சாசன ரீதியிலான உரிமைகளைப் பறித்து விட்டார்.

ரூபாய் தாள்கள் வாபஸ் நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை நமது போராட்டம் தொடரும். ஏனெனில் அரசின் நடவடிக்கையானது கடைகள், சந்தைகள், விவசாயச் செயல்பாடுகள் ஆகியவற்றை முடக்கிவிட்டது.

பா.ஜ.க எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை வெளியிடுமாறு மோடி கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் இந்த நடவடிக்கையை அவர் தன்னிடம் இருந்தும், பா.ஜ.க தலைவர் அமித் ஷாவிடம் இருந்தும் தொடங்க வேண்டும். அவ்வாறு தனது வங்கிக் கணக்கு விவரங்களை அறிவிக்க மோடி தயாரா?

மத்திய அரசின் ரூபாய் தாள்கள் வாபஸ் நடவடிக்கையானது மிகப்பெரிய ஊழல் மட்டுமன்றி, கறுப்பு அவசர நிலையும் ஆகும். இதற்கு எதிரான போராட்டத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக சாமானிய மக்கள் மாற்ற வேண்டும். மற்றொரு சுதந்திரப் போராட்டமான இதைக் கைவிடவே கூடாது. ஏனெனில், நரேந்திர மோடியால் நாட்டின் சுதந்திரத்துக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது- என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg