Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வரிவிதிப்பு சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

In இந்தியா
Updated: 07:50 GMT, Nov 30, 2016 | Published: 06:08 GMT, Nov 30, 2016 |
0 Comments
1254
This post was written by : Varothayan

கணக்கில் வராத செல்லாத ரூபாய் தாள்களை வைத்திருப்பவர்கள், அதனைத் தெரியப்படுத்தி கூடுதல் அபராத வட்டியுடன் மாற்றிக்கொள்ள வாய்ப்பளிக்கும் ‘2 ஆவது வரிவிதிப்புச் சட்டத் திருத்த மசோதா’ மக்களவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நிறைவேற்றப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் பெரும் அமளிக்கிடையே அந்த மசோதா எவ்வித விவாதமுமின்றி, உடனடியாக நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், இந்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வருமான வரிச் சட்டத் திருத்தத்தின் மூலம் செல்லாத ரூபாய் தாள்களை கறுப்புப் பணமாக பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டால் அதற்கு 60 சதவீத வரியும், அபராதக் கட்டணங்களும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், தாமாக முன்வந்து கறுப்புப் பணத்தை ஒப்படைப்பவர்களுக்கு, அந்த வருவாய்க்கான ஆதாரத்தைக் கேட்காமல் அபராதம், கூடுதல் கட்டணங்கள் உள்பட 50 சதவீத வரி விதிக்க அந்தச் சட்டத் திருத்தம் வழிவகை செய்யும் என்றார்.

மக்கள் நலனைக் கருதி அந்த மசோதா உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று தெரிவித்த மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், அந்த மசோதா மீதான விவதாதத்தை உறுப்பினர்களின் அமளிக்கிடையே நடத்த முடியாது என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து, குரல் வாக்கு மூலம் 2 ஆவது வரிவிதிப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதி, ஏழை மக்களுக்கான நீர்ப் பாசன வசதி, வீட்டு வசதி, கழிப்பிட வசதி, உள்கட்டமைப்பு வசதிகள், ஆரம்பக் கல்வி, ஆரம்ப சுகாதார வசதித் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg