Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவில் பிரமாண்டமாகத் தொடங்கும் விஜய் – அட்லி படம்

In சினிமா
Updated: 07:05 GMT, Nov 30, 2016 | Published: 07:05 GMT, Nov 30, 2016 |
0 Comments
1333
This post was written by : Varothayan

அமெரிக்காவில் இருக்கும் மிகப்பெரிய ஸ்டுடியோ ஒன்றில் விஜய்-அட்லி இணையும் புதிய படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய் தற்போது ‘பைரவா’ படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை முடித்த பிறகு அட்லியின் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கப் போவதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது. இந்நிலையில், அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை கலிபோர்னியாவில் உள்ள மிகப்பெரிய வோர்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் நடத்தவுள்ளனர். ஹாலிவுட்டின் பிரம்மாண்ட படங்களான ‘லைட்ஸ் அவுட்’, ‘கான்ஜுரிங் 2’, ‘பேட்மேன் எதிர் சூப்பர் மேன்’, ‘காட்ஸில்லா’, ‘ஹாரிபாட்டர்’, ‘இன்செப்சன்’ உள்ளிட்ட பல படங்களுக்கு வோர்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவின் பங்களிப்பு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், தற்போது வோர்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் படமாகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை விஜய்-அட்லி படம் பெறப்போவதாகவும் கூறப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg