Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிரடி வீரர் யுவராஜ்சிங் திருமண பந்தத்தில் இணைந்தார்

In கிாிக்கட்
Updated: 09:47 GMT, Nov 30, 2016 | Published: 07:20 GMT, Nov 30, 2016 |
0 Comments
1969
This post was written by : Anojkiyan

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் யுவராஜ்சிங் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த மொடல் அழகியான ஹாசல் கீச் இருவருக்கும் இன்று (புதன்கிழமை) பஞ்சாப் மாநிலம் குர்த்வாராவில் திருமணம் நடக்கிறது.

இந்த திருமணத்தில் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய வீரர்களும் திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள். மேலும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே திருமண அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

திருமணத்துக்கு முந்தைய தினமான நேற்று மணப்பெண்ணுக்கு மெகந்தி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அத்தோடு நட்சத்திர ஹோட்டலில் மது விருந்தும் நடைபெற்றது.

இதில் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய வீரர்கள் அனைவரும் பங்கேற்றனர். மேலும் முன்னாள் அணிதலைவர் கபில்தேவ், ஆசிஷ் நெஹ்ரா, முகமது க்யூப் ஆகியோரும் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg