Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய சமாதான உடன்படிக்கை: கொலம்பிய நாடாளுமன்ற மேலவை ஒப்புதல்

In உலகம்
Updated: 07:22 GMT, Nov 30, 2016 | Published: 07:21 GMT, Nov 30, 2016 |
0 Comments
1209
This post was written by : Risha

கொலம்பிய அரசாங்கத்திற்கும், ஃபார்க் போராளிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புதிய சமாதான உடன்படிக்கைக்கு கொலம்பிய நாடாளுமன்றத்தின் மேலவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதேவேளை, புதிய உடன்படிக்கையானது எதிர்தரப்பு கோரிய மாற்றங்களை உள்ளடக்கியதாக வலுமிக்கதாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி ஜுவான் மெனுவல் குறிப்பிட்டார்.

இந்நிலையில், புதிய சமாதான உடன்படிக்கையானது ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்தின் கீழவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கொலம்பியாவில் 50 வருடங்களுக்கும் மேலாகத் தொடரும் உள்நாட்டு யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் இதற்கு முன்னரும் ஒரு சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

குறித்த உடன்படிக்கைக்கு மக்கள் ஆணையைப் பெறும் பொருட்டு சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது, குறித்த உடன்படிக்கையில் கிளர்ச்சியாளர்களுக்கு சாதகமாக பல விடயங்கள் உள்ளடக்கப்படுவதாக தெரிவித்து நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய சமாதான உடன்படிக்கை மக்கள் வாக்கெடுப்பிற்கு விடப்படாது, நேரடியாக நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் மேலவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு தற்போது கீழவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கொலம்பியாவில் அரை நூற்றாண்டாக தொடர்ந்த உள்நாட்டு மோதல்களினால் சுமார் 2 இலட்சத்திற்கு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg