Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெல்லியில் கடும் பனிப்பொழிவு: போக்குவரத்து ஸ்தம்பிப்பு

In இந்தியா
Updated: 11:05 GMT, Nov 30, 2016 | Published: 08:03 GMT, Nov 30, 2016 |
0 Comments
1153
This post was written by : Varothayan

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வழக்கத்தை விட அதிகப்படியான பனி மூட்டம் காணப்படுவதால் மக்கள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர். போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

கடந்த சில தினங்களாக அதிகாலை நேரங்களில் பனி மூட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. வீதிகளில் அதிகப்படியான பனிப்பொழிவு காணப்படுவதால் போதிய அளவில் வெளிச்சம் இல்லை. இதனால் எதிரில் வரும் வாகனங்கள் வாகன சாரதிகளுக்கு சரியாக தெரிவதில்லை. அவர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

உள்ளுர்வாசியான ராகுல் சிங் தெரிவிக்கையில், டெல்லியில் பனிப்பொழிவு அற்புதமாக இருக்கின்றது. ஆனால், பிரச்சனைகளும் கூடுகின்றன. எதனையும் சரியாகப் பார்க்க முடியவில்லை. முக்கியமாக சாரதிகள் கடும் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர்- என்றார்.

இன்னொரு டெல்லிவாசியான சியாம் குமார் குறிப்பிடுகையில், மிகவும் குளிராக உள்ளது. இந்த ஆண்டின் அதிக குளிரான காலப்பகுதி இது. கடுமையான பனிப்புகார் எங்கும் சூழ்ந்துள்ளது- என்றார்.

டெல்லி- குர்கான், டெல்லி- நொய்டா வீதிகளில் அதிகப்படியான பனிப்பொழிவு காணப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல சரியான வெளிச்சம் இல்லாத காரணத்தினால் டெல்லியில் இருந்து மற்ற இடங்களுக்கு செல்லும் விமானங்களும், டெல்லிக்கு வரும் விமானங்களும் தாமதமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை காற்று மாசுபாடு மக்களை பெரிதும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg