Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டமஸ்கஸ் இலக்குகள் மீது இஸ்ரேல் இராணுவம் ஏவுகணை தாக்குதல்

In உலகம்
Updated: 09:05 GMT, Nov 30, 2016 | Published: 09:04 GMT, Nov 30, 2016 |
0 Comments
1270
This post was written by : Risha

சிரிய மற்றும் லெபனான் தலைநகர்களான டமஸ்கஸ் மற்றும் பெய்ரூட் ஆகிய நகர்களை இணைக்கும் பிரதான நெடுஞ்சாலைக்கு அருகே சிரியாவின் இரண்டு தளங்களை இலக்குவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நான்கு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.

சிரிய இராணுவத்தின் ஆயுத கிடங்கு மற்றும் இராணுவ ஆயுதங்கள், உபகரணங்கள் என்பவற்றை தாங்கிச் சென்ற டிரக்குகள் என்பவற்றை இலக்கு வைத்தே மேற்படி தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் மேற்படி தாக்குதலினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

டமஸ்கஸ் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் டக்ஃபிரி தீவிரவாதிகளின் தீவிர ஆதரவாளர்களாக இஸ்ரேல் செயற்பட்டு வருகின்ற நிலையில், அண்டை நாடான சிரியாவில் ஆறு ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு யுத்தத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது குறித்து இஸ்ரேல் அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றது.

இதேவேளை, மத்திய கிழக்கு யுத்தத்தின்போது சிரியாவின் கோலன் குன்றை 1967ஆம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg