Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

In
Updated: 08:45 GMT, Nov 30, 2016 | Published: 08:44 GMT, Nov 30, 2016 |
0 Comments
1143
This post was written by : Elakkiya

இங்கிலாந்தின் ஹல் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி 31 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுயாதீன பொலிஸ் முறைப்பாடுகள் கண்காணிப்பு ஆணையகம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸிஸ் வீதிப் பகுதியில் நேற்று காலை 9.35 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தின் போது உயிரிழந்த நபர் மீது பொலிஸார் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக சுயாதீன பொலிஸ் முறைப்பாடுகள் கண்காணிப்பு ஆணையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறிருக்க குறித்த நபர் கோடாரி ஒன்றுடன் ஆக்ரோஷமாக செல்வதாக தமக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பகுதிக்க ஆயுதம் தாங்கிய பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டதாக ஹம்பர்சைட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும் சம்பவம் குறித்து சுயாதீன பொலிஸ் முறைப்பாடுகள் கண்காணிப்பு ஆணையகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

உயிரிழந்தவரின் பெயர் விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg