Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாதீட்டிற்கு எதிராக வலுக்கும் ஆர்ப்பாட்டங்கள்: நாடாளுமன்ற வீதிக்கு பூட்டு

In இலங்கை
Updated: 09:35 GMT, Nov 30, 2016 | Published: 09:10 GMT, Nov 30, 2016 |
0 Comments
1378
This post was written by : hoshika

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச ஊழியர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் வரை செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பகுதிக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதை தடுப்பதற்காக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு யோசனைகளுக்கு எதிராக பல்வேறு தரப்பினரால் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg