Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்கொட்லாந்தில் சிரிய சிறுவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகின்றதா?

In
Updated: 09:49 GMT, Nov 30, 2016 | Published: 09:48 GMT, Nov 30, 2016 |
0 Comments
1167
This post was written by : Elakkiya

ஸ்கொட்லாந்துக்கு வரவழைக்கப்பட்ட ஆதரவற்ற சிரிய அகதிக் குழந்தைக்களுக்கு ஸ்கொட்லாந்து பாடசாலைகள் அல்லது சமூக சேவகர் பிரிவுகளில் அனுமதி மறுக்கப்படுவதாக ஊடகம் ஒன்று அறிக்கையிட்டுள்ளது.

குறித்த ஊடகம் வெளியிட்ட அறிக்கையில் பிரகாரம், 15 வயது சிரிய சிறுவன் ஒருவனிடம் கேட்டபோது கிளாஸ்கோ நகரசபை அவர்களுக்கு எவ்வித உதவியும் புரியவில்லை என்று தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நீண்டகாலமாக கலே முகாமில் தங்கியிருந்து பின்னர் ஸ்கொட்லாந்துக்கு அழைத்து வரப்பட்ட குறித்த சிறுவன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவனுடைய மாமாவுடன் இணைந்து கொண்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறித்த சிறுவனுக்கு பாடசாலை அனுமதி கிடைக்கவில்லை.

இது குறித்து உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கையில், வெகு விரைவில் நிலைமை சீராகும் என்று குறிப்பிடுகின்றனர்.

கலே அகதிமுகாமில் நீண்டகாலமாக தங்கியிருந்த ஆதரவற்ற சிறுவர்கள் பிரித்தானியாவில் அவர்களுடைய உறவினர்கள் இருக்கும் பட்சத்தில் பிரித்தானியாவுக்குள் அழைத்து வரப்பட்டனர்.

ஏற்கனவே சிரிய போர் காரணமாக வருடக்கணக்காக பாடசாலைகளுக்கு செல்லாத சிறுவர்களுக்கு இனியும் கல்வி மறுக்கப்படுவதானது கவனத்திற்கு உரிய விடயமாக உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg