Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோஹின்யா மக்கள் மீதான வன்முறைகள் மனிதநேயத்திற்கு எதிரானவையாகும்: ஐ.நா

In உலகம்
Updated: 09:41 GMT, Nov 30, 2016 | Published: 09:39 GMT, Nov 30, 2016 |
0 Comments
1238
This post was written by : Risha
rohi

மியன்மாரின் மேற்கு பகுதியான ரோஹின்யா மாநிலத்தில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் மனித உரிமை மீறல்களானது, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாக வழிவகுக்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

ரோஹின்யா மக்கள் மீதான வன்முறைகள் மனித நேயத்திற்கு எதிரான செயற்பாடாக அமையக்கூடும் என கடந்த ஜூன் மாதம் ஐ.நா. சார்பில் அறிக்கையிடப்பட்டது. இருந்தபோதிலும், குறித்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க மியன்மார் அரசாங்கம் தவறியுள்ளதாக ஐ.நா. அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இதேவேளை, சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கும், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகளுக்கும் மதிப்பளிக்குமாறு ஐ.நா., மியன்மார் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கம் இதனை செய்ய தவறும் பட்சத்தில் மியன்மார் அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் ஐ.நா. எச்சரித்துள்ளது.

மியன்மாரின் ரோஹின்யா மாநிலத்தில் பாதுபாப்பு படைகள் மூலமான தொடர்ச்சியான வன்முறை காரணமாக நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் எல்லை தாண்டி பங்களாதேஷ் பயணித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு தேசிய நல்லிணக்கம் குறித்த வாக்குறுதிகளை வழங்கி அதிகாரத்தை கைப்பற்றிய மியன்மாரின் ஆலோசகர் ஆங் சான் சூகி அதனை கையாள்வதில் பாரிய சவால்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg