Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜினி மிகவும் பண்பானவர் : எமி ஜாக்சன் பேட்டி

In சினிமா
Updated: 15:34 GMT, Nov 30, 2016 | Published: 09:58 GMT, Nov 30, 2016 |
0 Comments
1398
This post was written by : Varothayan

ரஜினிகாந்த் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.0 இன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை 350 கோடி ரூபா செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

எதிர்வரும் 2017 தீபாவளியன்று படம் வெளிவரவுள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட ‘ஃபர்ஸ்ட் லுக்’ இல் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து ஏமி ஜாக்சன் கூறுகையில், அவர் மிகவும் தன்னடக்கத்துடன் பழகக்கூடியவர். ‘ஃபர்ஸ்ட் லுக்’ வெளியிடுவதற்கு முன்பு, நானும் ரஜினியும் நடித்துக்கொண்டிருந்தோம். அப்போது அவரிடம் ‘ஃபர்ஸ்ட் லுக்’ வெளியிடுவது மகிழ்ச்சியாக உள்ளதா? என்று கேட்டேன்.

அதற்கு அவர், ஆமாம். இதனால் மிகவும் படபடப்பாக உள்ளது. ஊடகங்கள் என்னைக் கவனிக்கும்போது மிகவும் பதற்றமாக இருப்பேன் என்றார். இதைவைத்து அவர் மிகவும் அடக்கமானவர் என்று அறிந்துகொள்ளலாம்- என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg