Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரானுடனான ஒப்பந்தம்: ட்ரம்ப்பிற்கு மத்திய புலனாய்வுத்துறை எச்சரிக்கை

In உலகம்
Updated: 17:06 GMT, Nov 30, 2016 | Published: 10:24 GMT, Nov 30, 2016 |
0 Comments
1403
This post was written by : Risha
john

புதிதாக ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள ட்ரம்ப், ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள எடுத்த தீர்மானமானது, பாரிய அழிவை ஏற்படுத்துவதுடன், அது ஒரு முட்டாள்தனமான செயற்பாடாகும் என மத்திய புலனாய்வு அமைப்பின் பணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை தான் கிழித்தெறியப் போவதாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மத்திய புலனாய்வு அமைப்பின் பணிப்பாளர் ஜோன் பிரென்னன் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், புதிய ஜனாதிபதி ரஷ்யாவின் வாக்குறுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், வெளியுறவுத் துறை விவகாரங்களில் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியான ஒபாமாவின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை ட்ரம்ப்பும், அமையவுள்ள அவரது அரசும் கைவிடக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய புலனாய்வு அமைப்பின் பணிப்பாளராக பணியாற்றிவரும் பிரென்னனின் பதவிக்காலம் எதிர்வரும் ஜனவரி மாதத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg