Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முகமாலை கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது

In இலங்கை
Updated: 10:11 GMT, Nov 30, 2016 | Published: 10:11 GMT, Nov 30, 2016 |
0 Comments
1278
This post was written by : Varshini

கிளிநொச்சி முகமாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு தொடர்பில் கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை)  ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

யுத்த காலத்தில் முகமாலை முன்னரங்க காவலரண் அமைந்திருந்த பகுதியில் இரு தரப்பினராலும் விதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியினை டாஸ் எனப்படும் மனித நேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது. இதற்கு ஜப்பான் நிதியுதவி வழங்கிவருகின்றது.

இந்நிலையில், குறித்த செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இச் சந்திப்பில் டாஸ் நிறுவனத்திற்கு நிதி உதவி வழங்கும் ஜப்பானிய உயர்ஸ்தானிக குழுவினர் மற்றும் டாஸ் நிறுவன உயரதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

mines-3 mines-2 mines-4

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg